< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்
|29 July 2024 5:37 AM IST
இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த அளவு மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் நேற்று கரை திரும்பினார்கள்.