< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
|28 Jan 2024 10:16 AM IST
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.
ராமேஸ்வரம்,
கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம் செய்துள்ளது.
அதனால் ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறியுள்ளனர்.