ராமநாதபுரம்
வடமாடு மஞ்சுவிரட்டு
|வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சனவெளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் தி.மு.க. வடக்கு ஒன்றியம் சார்பாக வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. வடக்கு பகுதி ஒன்றிய செயலாளர் புதுக்குறிச்சி கண்ணன் என்ற ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி ஆகியோர் வடமாடு மஞ்சுவிரட்டை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மேழிச்செல்வம் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளருக்கு பணம் முடிச்சு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி மணி, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகாபிரபு, யூனியன் துணை தலைவர் சேகர், பணிகோட்டை மாரிமுத்து, ஆர்.எஸ்.மங்கலம் நகர செயலாளர் கண்ணன், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவர் மெளசூர்யா கேசர்கான், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடாசலபதி, பிரபு, ராஜீவ்காந்தி, முசிறியாபேகம் புரோஸ்கான், காத்தியார்கோட்டை மணிமாறன், தகவல் தொழில்நுட்பு பிரிவு ஒன்றிய செயலாளர் வினோத்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.