< Back
மாநில செய்திகள்
சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
8 April 2023 12:15 AM IST

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மூவன்பட்டி மற்றும் கருப்பர் கோவில்பட்டிக்கு பாத்தியப்பட்ட மூத்தாங் கருப்பர் சுவாமி கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி மூத்தான் வயல் விவசாயிகள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கிராமத்தார்கள் சார்பாக ஜவுளி எடுத்து ஊர்வலமாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டு கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து வயல்வெளிகளில் ஆங்காங்கே கட்டப்பட்ட கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டது.

இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகளுடன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் மாடுகளை லாவகமாக பிடித்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும் சிறு காயங்கள் ஏற்பட்டது. சிங்கம்புணரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகள்