< Back
மாநில செய்திகள்
சிவகங்கை அருகே தெற்கு தமராக்கியில் விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

சிவகங்கை அருகே தெற்கு தமராக்கியில் விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
27 March 2023 12:15 AM IST

சிவகங்கை அருகே தெற்கு தமராக்கியில் மஞ்சுவிரட்டும் விறுவிறுப்பாக நடைபெற்றது.


சிவகங்கையை அடுத்துள்ளது தெற்கு தமராக்கி கிராமம். .இங்கு கலியுக வரத அய்யனார், ஏழை காத்த அம்மன், மந்தை கருப்பண சுவாமி கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்குள்ள திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 850 காளைகள் பங்கேற்றன. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் போட்டிகளை துவக்கி வைத்தார்

சீறிப்பாய்ந்த காளைகளை சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் அடக்கினர். போட்டியின் போது காளைகள் முட்டியதில் போலீஸ் ஏட்டு கிரிவாசன் (40), அஜித் (25), பாலசந்துரு (21), அபிசித்தர் (22), அஜய்குமார் (23), அருண்குமார் (19). சிலம்பரசன் (55) உள்பட 45-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களுக்கு மருத்துவ குழுவினர் உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர்

இந்த போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் அண்டா, கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள், வேளாண் கருவிகள் போன்றவை கிராம மக்கள் சார்பில் பரிசாக வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்