< Back
மாநில செய்திகள்
இளையான்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை
மாநில செய்திகள்

இளையான்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

தினத்தந்தி
|
7 March 2023 12:15 AM IST

இளையான்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கலுங்கு முனீஸ்வரர் கோவிலின் மாசி களரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அய்யம்பட்டி தெற்கு தெரு இளைஞர் மன்றம், கிராம பொதுமக்கள் இணைந்து 5-ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் 14 காளைகள் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் கருப்பாயூரணி, திருவாடானை, நாட்டரசன் கோட்டை, பாண்டிகோவில், திண்டுக்கல் உள்பட 15 அணியினர் 9 மாடுபிடி வீரர்கள் வீதம் பங்கேற்று மாடுகளை பிடித்தனர். முன்னதாக காளைகளுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் மாலை மரியாதை செய்யப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தென்னங் கன்றுகள், கேடயம், பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ கலுங்கு முனீஸ்வரர் கோவிலில் நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்