< Back
மாநில செய்திகள்
மேலூர் அருகே  மஞ்சுவிரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு
மதுரை
மாநில செய்திகள்

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு

தினத்தந்தி
|
4 March 2023 12:30 AM IST

மேலூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி முதியவர் உயிரிழந்தார்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டியில் முத்தாளம்மன்கோவில் விழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் அந்த காளைகளை அடக்கினார்கள். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள அம்மாபட்டியை சேர்ந்த தெய்வம் (வயது 65) என்பவர் மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருத்தபோது மாடு முட்டி இறந்தார். 20-க்கும் மேற்பட்டோருக்கு மாடுகள் முட்டி காயங்கள் ஏற்பட்டன. மேலவளவு போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்