< Back
மாநில செய்திகள்
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

தினத்தந்தி
|
29 Jan 2023 12:15 AM IST

முதுகுளத்தூரில் நேதாஜி பிறந்தநாளையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் நேதாஜி பிறந்தநாளையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு போட்டி

முதுகுளத்தூர் சங்கரபாண்டி ஊருணியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளை முன்னிட்டு முதுகுளத்தூர் நேதாஜி கல்வி அறக்கட்டளை சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடம் விளையாட அனுமதிக்கப்பட்டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசுகள்

போட்டியில் சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியின்போது காளைகள் முட்டியதில் பலர் காயமடைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. எம்.பி. தர்மர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

இதில் முதுகுளத்தூர், கமுதி, அபிராமம், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேதாஜி கல்வி அறக்கட்டளை தலைவர் மயில்வாகனன், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் பூமிநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்