< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அண்ணாசாலையில் இயங்கி வந்த தெற்கு மண்டல மின்வாரிய அலுவலகம் காஞ்சிபுரத்திற்கு இடமாற்றம்
|10 Nov 2022 6:21 AM IST
அண்ணாசாலையில் இயங்கி வந்த தெற்கு மண்டல மின்வாரிய அலுவலகம் நாளை முதல் காஞ்சிபுரத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தெற்கு மண்டல தலைமை என்ஜினீயர் மின்வாரிய அலுவலகம், சென்னை அண்ணாசாலையில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் காஞ்சிபுரம் மண்டலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் காஞ்சிபுரம் வேலூர் ரோடு ஒலிமுகமது பேட்டை அண்ணா மாளிகையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள வளாகத்தில் காஞ்சீபுரம் தலைமை அலுவலகமாக செயல்படும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.