< Back
மாநில செய்திகள்
செல்போன் கேட்டு மகன் தொந்தரவு.. தூக்குப்போடுவது போல் நடித்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்
மாநில செய்திகள்

செல்போன் கேட்டு மகன் தொந்தரவு.. தூக்குப்போடுவது போல் நடித்த தாய்.. அடுத்து நடந்த விபரீதம்

தினத்தந்தி
|
6 Jun 2024 9:37 AM IST

மகன் லெனின் செல்போன் கேட்டு தாயிடம் தொந்தரவு செய்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை செல்லாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). இவரது மனைவி பழனியம்மாள் (39). இவர்கள் பால் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் லெனின் பி.சி.ஏ. படித்து வருகிறார். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் லெனின் செல்போன் கேட்டு தாயிடம் தொந்தரவு செய்துள்ளார். மேலும் செல்போன் வாங்கி தரவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போய்விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் தனது மகனை மிரட்டுவதற்காக பழனியம்மாள் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதுபோல் நடித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலை அவரது கழுத்தை இறுக்கியது. இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்