< Back
மாநில செய்திகள்
பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்
சென்னை
மாநில செய்திகள்

பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன்

தினத்தந்தி
|
17 Feb 2023 3:09 PM IST

பெரும்பாக்கத்தில் தாயை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 54). இவருடைய மனைவி சீதாதேவி (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (28), வைத்தியநாதன் (25) என 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரனும், அவருடைய இளைய மகன் வைத்தியநாதனும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் மூத்த மகன் சதீஷ்குமாருடன், தாய் சீதாதேவி இருந்தார்.

வெளியே சென்றிருந்த வைத்தியநாதன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது முன் அறையில் தாய் சீதாதேவி தலை மற்றும் முகத்தில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் அண்ணன் சதீஷ்குமாரை காணவில்லை. இதுதொடர்பாக பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சீதாதேவியின் மூத்த மகன் சதீஷ்குமார், தன் தாயை இரும்பு கம்பியால் தலை மற்றும் முகத்தில் அடித்துக்கொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

மாம்பாக்கம் பகுதியில் சுற்றிய சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. தாய் ஏதாவது சொல்ல இதில் ஆத்திரம் அடைந்த அவர், சீதாதேவியை அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்