< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
வீட்டில் பதுங்கி இருந்த நல்லபாம்பு பிடிபட்டது
|12 Sept 2022 1:20 AM IST
திசையன்விளையில் வீட்டில் பதுங்கி இருந்த நல்லபாம்பு பிடிபட்டது.
திசையன்விளை:
திசையன்விளை செல்வமருதூர் வணிக வைசியர் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் மகன் ஈஸ்வர். இவர் நேற்று மின்மோட்டார் அறையில் மின்மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு சுமார் 5 அடி நீளம் உள்ள நல்லபாம்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஈஸ்வர் தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, வீட்டில் பதுங்கி இருந்த நல்லபாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.