< Back
மாநில செய்திகள்
அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படும்தி ரெட் பலூன் குறும்படம்...!
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படும்'தி ரெட் பலூன்' குறும்படம்...!

தினத்தந்தி
|
13 Oct 2022 9:05 AM IST

ஆஸ்காா் விருது பெற்ற ‘தி ரெட் பலூன்’ குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.

சென்னை,

ஆஸ்காா் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படவுள்ளது.

மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று 'தி ரெட் பலூன்' திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும்.

மேலும் செய்திகள்