< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வாடகை செலுத்தாததால் கடைக்கு 'சீல்' வைப்பு
|1 Sept 2023 3:54 AM IST
வாடகை செலுத்தாததால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான காந்தி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 52 கடைகள் உள்ளன. அதில் பல கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கி அதிகளவில் வைத்துள்ளதால் அவர்களுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நிலுவைத்தொகை கட்டத்தவறினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஒரு கடையின் உரிமையாளர் தவிர மற்ற அனைவரும் நிலுவைத்தொகையை செலுத்தி விட்டனர். இதனைதொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் அந்த கடையை பூட்டி 'சீல்' வைத்தனர்.