< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
|5 Jan 2023 12:31 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, அரியலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வரலட்சுமி மற்றும் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு ஆகியோர் அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கடையை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.