< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'
|12 Aug 2022 1:27 AM IST
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வையம்பட்டி:
மணப்பாறையை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பெட்ரோலை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாக, வையம்பட்டி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.