< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம்
|11 Dec 2022 12:15 AM IST
படகில் இருந்து தவறி விழுந்து மாயமான காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியில் சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமாகி விட்டார். இதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.