< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பாம்பனில் பல அடி தூரம் உள்வாங்கிய கடல்
|15 July 2022 1:36 PM IST
பாம்பன் தென் கடல் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது.
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. அதுபோல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களும் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாம்பன் தென் கடல் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக பல அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலில் உள்ள பாறை, பாசி,சிப்பி, சங்கு உள்ளிட்டவைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. இது பற்றி மீனவர்கள் கூறும் போது இது போன்ற காற்று சீசனில் கடல் உள்வாங்குவது இயல்பான ஒன்றுதான் என தெரிவித்தனர்.