கன்னியாகுமரி
தொழில் அதிபர் தம்பிக்கு அரிவாள் வெட்டு
|நித்திரவிளை அருகே தொழில் அதிபர் தம்பியை அரிவாளால் வெட்டிய ௭ பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே தொழில் அதிபர் தம்பியை அரிவாளால் வெட்டிய ௭ பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்திரவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 60) தொழிலதிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஈவன்ஜெரி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கிறிஸ்டோபரின் தம்பி ரெஜி (43) சம்பவத்தன்று இரவு காணவிளை பகுதியில் உள்ள ஒரு கடை அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் ஈவன்ஜெரி அவரது சகோதரர் எமில் ஜெய்சன் மற்றும் ரெபின்ராஜ், கிறிஸ்டோபர், லாரன்ஸ் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் வந்தனர். அவர்கள் திடீரென ரெஜியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ரெஜியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கிறிஸ்டோபர் கொடுத்த புகாரின்பேரில் ஈவன்ஜெரி உள்பட 7 பேர் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.