< Back
மாநில செய்திகள்
பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது
விருதுநகர்
மாநில செய்திகள்

பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

தினத்தந்தி
|
28 July 2022 1:12 AM IST

திருச்சுழியில் தொடர்மழையினால் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

திருச்சுழி,

திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ெதாடர்ந்து மழை பெய்தது. இந்தமழையினால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. இரவு நேரத்தில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்