ராமநாதபுரம்
பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம
|பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம
ராமநாதபுரத்தை அடுத்துள்ள நயினார் கோவில் பகுதியில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜூலியஸ் ரவிச்சந்திரன்(வயது 54). இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் நயினார்கோவில் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவரின் இந்த செயலுக்கு அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் ஜெயபால் என்பவரும் உடந்தையாக இருந்ததாக அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன், ஆங்கில ஆசிரியர் ஜெயபால் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் கைதான தலைமை ஆசிரியர் மற்றும் தலைமறைவாக உள்ள ஆங்கில ஆசிரியர் ஜெயபால் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.