மயிலாடுதுறை
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
|தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
திருவெண்காடு
திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர்கள் அகோர மூர்த்தி, பாலா, வக்கீல் பாலாஜி, மாவட்ட மீனவர் அணி தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பேரவை செயலாளர் காளை செந்தில் வரவேற்றார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பாரதி, மாவட்ட பேரவை செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிப்பது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது. மங்கை மடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது இதனை வன்மையாக கண்டிப்பது. விரைவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய பேரவை பொறுப்பாளர்கள் சீனிவாசன், குட்டி பாலு, மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் நன்றி கூறினார்.