< Back
மாநில செய்திகள்
தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது சிறப்பு வாய்ந்தது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது சிறப்பு வாய்ந்தது

தினத்தந்தி
|
31 May 2023 12:15 AM IST

தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றததில் நிறுவப்பட்டது சிறப்பு வாய்ந்தது என்று வேளாக்குறிச்சி ஆதீனம் கூறினார்.

திட்டச்சேரி:

தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றததில் நிறுவப்பட்டது சிறப்பு வாய்ந்தது என்று வேளாக்குறிச்சி ஆதீனம் கூறினார்.

பேட்டி

நாகை மாவட்டம் திருமருகலில் வேளாக்குறிச்சி ஆதீனம் திருப்புகலூர் குருமகா சன்னிதானம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற திறப்பு விழா சர்வமத பிரார்த்தனையோடு சிறப்பாக நடந்தது. குறிப்பாக தமிழ் சைவ ஆதீனங்கள் மூலம் வழங்கப்பட்ட செங்கோல், நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது சிறப்பு வாய்ந்தது.

நீதிக்கு தலைவணங்கியதாக...

கங்கை நீரால் தூய்மைபடுத்தப்பட்டு செங்கோல் முறைப்படி வேளாங்குறிச்சி ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களால் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அதை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் நிறுவினார்.

பிரதமர் மோடி தலைவணங்கி செங்கோலை பெற்றுக்கொண்டது எங்களுக்கு எல்லாம் நெகிழ்வை தந்தது. அவர் நீதிக்கு தலைவணங்கியதாகவே பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் நீதி, நேர்மை, சமத்துவம் ஆகியவற்றின் குறியீடாகவே செங்கோல் பார்க்கப்படுகிறது.

மனநிறைவு

பிரதமர் அவரது இல்லத்திற்கு எங்களை அழைத்து கவுரவித்தபோது மக்களிடம் நல்லிணக்கமும், தேசப்பற்றும், ஒருமைப்பாடும் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை எல்லாம் நினைவு கூர்ந்து, அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தி பேசினார்.

எத்தனையோ தலைவர்கள் சுதந்திரத்திற்காக பாடுபட்டாலும், முதல் குரல் தமிழகத்தில் இருந்து எழுந்தது என்பதை பெருமிதமாக பிரதமர் குறிப்பிட்டது எங்களுக்கு மனநிறைவை தந்தது.

தமிழ்மொழிக்காக பாடுபடுகிறார்

தமிழ் மொழிக்காக பிரதமர் பாடுபடுகிறார் என்பது காசி தமிழ் சங்கமம் மூலம் தெரிகிறது. 14 மொழிகளில் திருக்குறளை வெளியிட்டு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்