நாகப்பட்டினம்
தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்
|தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்
நாகூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. 1 பழம் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தர்பூசணி பழங்கள் விற்பனை
நாைக மாவட்டம் நாகூரில் கடந்த சில நாட்களாக கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயில் கொடுமையில் இருந்து சமாளிப்பதற்காக பொதுமக்கள் இளநீர், மோர், சர்பத், தர்பூசணி பழங்கள் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். நாகூரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்கான தர்பூசணி பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பழங்கள் தண்ணீர் சத்து கொண்டதாலும், வெயிலுக்கு இதமானதாலும் பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். வெயிலின் தாக்கத்தையொட்டி நாகூரில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
1 பழம் ரூ.100 வரை விற்பனை
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,
திண்டிவனத்தில் இருந்து பழங்களை வாகனங்களில் எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறோம். இதற்காக அதிக அளவில் செலவாகிறது. தர்பூசணி பழம் ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழத்தில் அதிகமாக தண்ணீர் சத்து உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர். தற்போது விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது என்றனர்.