< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தினத்தந்தி
|
9 July 2023 12:15 AM IST

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்தனர்.

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நேற்று உற்சாகமாக குளித்தனர்.

குற்றாலம் சீசன்

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இடை இடையே சாரல் மழை பெய்கிறது. வெயில் இல்லாமல் மேகமூட்டமாக காணப்படுகிறது.

நேற்று முன்தினம் காலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. மதியத்துக்கு பிறகு மெயின் அருவியை தவிர மற்ற அருவிகளில் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்ற அருவிகளில் குளித்து சென்றனர்.

உற்சாக குளியல்

விடுமுறை நாளான நேற்று குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றாலத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்