< Back
தமிழக செய்திகள்

திருவாரூர்
தமிழக செய்திகள்
ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

8 Nov 2022 12:15 AM IST
ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய 19 கணினி உதவியாளர்களை பணிநீக்கம் உத்தரவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மண்டல நிர்வாகி மணிகண்டன், நாகை மாவட்ட தலைவர் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணினி உதவியாளர்கள் சங்க நிர்வாகி சிவபாலன் நன்றி கூறினார்.