தஞ்சாவூர்
ஓடும் காரில் தீப்பிடித்தது
|ஓடும் காரில் தீப்பிடித்தது
தஞ்சாவூர்:
தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்தவர் அசார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் திருச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அசாருடன் சேர்த்து 5 பேர் பயணம் செய்தனர்.
கார் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் கணபதிநகர் அருகே சென்ற போது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென அதிக அளவு புகை வந்தது. உடனடியாக அசார் காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்தவர்களை பத்திரமாக கீழே இறங்குமாறு கூறினார். இதையடுத்து அனைவரும் காரில் இருந்து இறங்கினர்.பின்னர் காரின் முன்பகுதியை திறந்து பார்த்த போது திடீரென தீப்பிடித்து இருந்தது. இது குறித்து உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும் அருகில் இருந்த வங்கியில் இருந்து தீயணைக்கும் கருவியை எடுத்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தஞ்சை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோ பிரசன்னா உத்தரவின் பேரில் நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. ஓடும் காரில் ஏற்பட்ட தீயை உரிய நேரத்தில் பார்த்து அணைத்ததால் 5 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.