< Back
மாநில செய்திகள்
தி.மு.க.பிரமுகர் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தி.மு.க.பிரமுகர் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
23 July 2022 11:36 PM IST

தி.மு.க.பிரமுகர் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசம்

நன்னிலம்

நன்னிலத்தில் தி.மு.க.பிரமுகர் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் லயன் கரை தெருவை சேந்தவர் வீரையன். இவர் தனது மாடி வீட்டின் மேல் தளத்தில் கூரை வீடு அமைத்து வசித்து வருகிறார். நேற்று மதியம் 3 மணி அளவில் திடீரென வீரையன் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்

இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, வசந்தி, பாஸ்கரன், ராஜா ஆகியோரின் வீடுகளுக்கும் எரிந்து நாசமாகின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் மற்றும் பேரளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நன்னிலம் தாசில்தார் பத்மினி, நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் இன்ஸ்பெக்டர் சுகுணா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

தி.மு.க. பிரமுகர் உள்பட 5 பேரின் கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்