< Back
மாநில செய்திகள்
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு...!
மாநில செய்திகள்

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு...!

தினத்தந்தி
|
14 July 2022 2:33 PM IST

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ வார்டு கட்டிடத்தில் வாராண்டாவில் காங்கிரீட் காரை பெயர்ந்து விழுந்ததில் ரேவதி என்ற பெண்ணுக்கு லேசான உள்காயம் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் அடுத்த தென்னடார் கிராமத்திலிருந்து சசிகலா என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த உறவினர் ரேவதி பிரசவ அறைக்கு வெளியில் உள்ள வரண்டாவில் படுத்திருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை காரை பெயர்ந்து விழுந்தது.

இதில் ரேவதிக்கு கைவிரலில் லேசான உள் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் செய்திகள்