< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
கழிவறையின் கூரை தீப்பிடித்து எரிந்தது
|11 March 2023 1:35 AM IST
கழிவறையின் கூரை தீப்பிடித்து எரிந்தது
பேராவூரணி பழைய பஸ் நிலையம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறையின் முன்பு தென்னங்கீற்றால் கூரை வேயப்பட்டிருந்தது. நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென இந்த கூரை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.