< Back
மாநில செய்திகள்
தீயில் எாிந்து கூரை வீடு நாசம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

தீயில் எாிந்து கூரை வீடு நாசம்

தினத்தந்தி
|
19 May 2023 12:15 AM IST

தீயில் எாிந்து கூரை வீடு நாசம்

கீழ்வேளூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடு நாசமானது. இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது

கீழ்வேளூர் ஒன்றியம் சிகார் ஊராட்சி செட்டி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் அருள்ராஜ். இவர் மர இழைப்பகத்தில் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது அருள்ராஜ் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திருவாரூர், கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீைய அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி, பீரோவில் வைத்து இருந்த நகைகள், ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் மண்டல துணை தாசில்தார் சந்திரகலா,

வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அக்பர் நிசா, ஊராட்சி தலைவர் தெய்வாணை ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அருள்ராஜ் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினர். இந்த தீ விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்