< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
கியாஸ் கசிந்து கூரை வீடு எரிந்து சாம்பல்
|11 Feb 2023 12:15 AM IST
திருவெண்ணெய்நல்லூர் அருகே கியாஸ் கசிந்து கூரை வீடு எரிந்து சாம்பல்
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அண்டராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் குமார்(வயது 45). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிந்து கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார் வீட்டை விட்டுவெளியே ஓட்டம் பிடித்தார். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.