நாகப்பட்டினம்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
|நாகை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேற்கூரை இடிந்து விழுந்தது
வெளிப்பாளையம்:
நாகை சுனாமி குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
நாகை புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் (வயது 42) மீனவர். இவருடைய மனைவி வெண்மதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நாகையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் செல்வம் வீட்டின் பின் பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அப்போது வெண்மதி சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்ததாலும், செல்வம் மற்றும் குழந்தைகள் வீட்டின் முன்பகுதியில் இருந்ததாலும் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், சுனாமி குடியிருப்பில் பல வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. வீட்டின் மேற்கூரைகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மழைகாலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. லேசாக மழை பெய்தால் கூட வீடுகளில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளை வைத்து கொண்டு மிகவும் சிரமப்படுகின்றோம்.எனவே சேதமடைந்துள்ள வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றனர்.