< Back
மாநில செய்திகள்
தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

தினத்தந்தி
|
4 May 2023 1:27 AM IST

தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது

பூதலூர் அருகே வீரமரசன்பேட்டை கிராமத்தில் உள்ள அம்மன் புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது45). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நேற்று அதிகாலை தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அதேபோல் முத்துவீரக்கண்டியன்பட்டி மாதா கோவில் தெருவை சேர்ந்த அற்புதமேரி (55) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. எனவே பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்