< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை சைதாப்பேட்டையில் கனமழை காரணமாக பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து
|29 Sept 2023 8:00 PM IST
கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது.
சென்னை,
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் இன்று மாலை 6 மணி முதல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்தது. அந்த சமயத்தில் மழைக்காக பெட்ரோல் பங்கில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.