< Back
மாநில செய்திகள்
கூரை வீடு தீயில் எரிந்து நாசம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கூரை வீடு தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
12 Jun 2023 12:15 AM IST

கூரை வீடு தீயில் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டியில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

கூரை வீடு தீயில் எரிந்து நாசம்

திருத்துறைப்பூண்டி வெட்டுக்குளம் தெருவில் வசித்து வருபவர் பூக்கடை தொழிலாளி சேகர் (வயது 50). இவரது கூரை வீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பிடித்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீைய அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, மெத்தை, கிரைண்டர், மிக்சி, டி.வி உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

ஆறுதல்

தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி மலர் வணிக சங்க தலைவர் காளிதாஸ் மற்றும் மூத்த பொறுப்பாளர் சிக்கந்தர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து தீயினால் பாதிக்கப்பட்ட மலர் வணிக தொழிலாளர் சேகருக்கு ஆறுதல் கூறினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்