< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
கூரை வீடு எரிந்து நாசம்
|1 Oct 2023 12:15 AM IST
கூத்தாநல்லூர் அருகே கூரை வீடு எரிந்து நாசமானது.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பண்டுதக்குடியைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி மரியசெல்வம் (வயது 65). இவரது கூரை வீடு நேற்று எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கிரைண்டர், டி.வி., சான்றிதழ்கள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் உடனடியாக கண்டறியப்படவில்லை. இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.