< Back
மாநில செய்திகள்
பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்
திருச்சி
மாநில செய்திகள்

பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சம்

தினத்தந்தி
|
7 Jun 2023 1:05 AM IST

பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் காதல் திருமண ஜோடி தஞ்சமடைந்தது.

சமயபுரம்:

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள தியாகராயநகரை அடுத்த வி.எம்.சத்திரம் ஆனந்தம் காலனியை சேர்ந்தவர் சிவலிங்கராஜன். இவரது மகள் சிவானி (வயது 24). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சமயபுரத்தை சேர்ந்த மனோகரின் மகன் செல்வகார்த்திகேயன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு சிவானியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று முன்தினம் சிவானியும், செல்வகார்த்திகேயனும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.இது பற்றி சிவானியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்து, போலீஸ் நிலையம் வரவழைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சிவானி தனது காதல் கணவர் செல்வகார்த்திகேயனுடன் செல்வதாக கூறியதால், அவருடன் சிவானியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்