< Back
மாநில செய்திகள்
மேற்பனைக்காட்டில் சாலை சீரமைக்கப்பட்டது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மேற்பனைக்காட்டில் சாலை சீரமைக்கப்பட்டது

தினத்தந்தி
|
27 Jun 2023 11:55 PM IST

மேற்பனைக்காட்டில் சாலை சீரமைக்கப்பட்டது.

கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் கல்லணை கால்வாய் தண்ணீர் பாசனத்திற்காக செல்லும் வாய்க்கால் சாலையை கடக்க பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாலத்தின் அருகே சாலை அமுங்குவது பற்றி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து பள்ளமான சாலை சீரமைக்கப்பட்டது. பாலம் அருகே உள்ள சாலை பெரிய பள்ளமாகி போக்குவரத்து தடைபடும் முன்பே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், சீரமைத்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்