< Back
மாநில செய்திகள்
எம்.ஜி.ஆர் காலத்தின் எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது - முன்னாள் அமைச்சர் காமராஜ்
மாநில செய்திகள்

"எம்.ஜி.ஆர் காலத்தின் எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது" - முன்னாள் அமைச்சர் காமராஜ்

தினத்தந்தி
|
26 Jun 2022 6:25 PM IST

எம்.ஜி.ஆர் காலத்தின் எழுச்சி தற்போது ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

சென்னை,

எம்.ஜி.ஆர் காலத்தில் ஏற்பட்ட எழுச்சியைப் போல தற்போது எடப்பாடி பழனிசாமி காலத்திலும் அதிமுகவில் எழுச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காமராஜ் கூறும்போது, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் அருமைக்குரிய அண்ணனாக 4 ஆண்டுகள் 2 மாதங்கள் பணியாற்றிய சிறப்பான தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று சொன்னால் அதில் மிகையில்லை. அவர் சிறப்பாக பணியாற்றினார். மக்கள் சொல்கிறார்கள், தொண்டர்கள் சொல்கிறார்கள், நிர்வாகிகள் சொல்கிறார்கள்.

எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு எழுச்சி மிக்க இயக்கமாக இன்று அதிமுக எழுந்து நிற்கிறது. எம்.ஜி.ஆர் காலத்து எழுச்சி அதிமுகவுக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா காலத்து எழுச்சி அதிமுகவுக்கு வந்துவிட்டது. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுந்து நிற்கிறது. எழுச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்