< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
புத்துயிர் பெற்ற மூல வைகை ஆறு.. பூக்கள் தூவி வரவேற்ற பொதுமக்கள்
|15 Oct 2023 10:30 PM IST
வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் வைகை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான வருஷநாடு வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் வறண்டு கிடந்த மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வைகை ஆற்றில் வந்த தண்ணீரை கடமலைக்குண்டு பகுதி பொதுமக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
இதனால் சுற்றுப்புற கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. கடமலைக்குண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. வைகை ஆற்றங்கரையோரங்களில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.