தஞ்சாவூர்
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்
|ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும்
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தஞ்சையில், சசிகலா கூறினார்.
மொழிப்போர் தியாகிகள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா தஞ்சையில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் மன்னார்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நேற்று தஞ்சையை அடுத்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்,
தாக்கத்தை ஏற்படுத்தும்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஈரோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு இதுகுறித்து ஏற்கனவே கூறி விட்டேன் என்றார். கவர்னர் தேநீர் விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், விருந்தோம்பலை எப்பவும் கொண்டாடும் மக்கள் தமிழ் மக்கள், அதை தவிர்ப்பது என்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல என்றார்.