< Back
மாநில செய்திகள்
கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
தென்காசி
மாநில செய்திகள்

கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு

தினத்தந்தி
|
13 May 2023 2:19 AM IST

சுரண்டை அருகே கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்கப்பட்டது.

சுரண்டை:

சுரண்டை அருகே குலையநேரி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பூப்பாண்டியாபுரம் கிராமத்திற்கு கூடுதல் நீர் ஆதாரத்திற்காக கடந்த 2016-ம் ஆண்டு மூன்று லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கிணற்றின் மேல் கம்பி வலை அமைக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டி, கிணற்றின் மீது சேதமடைந்த கம்பி வலையில் ஏறும்போது, கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் முத்துசெல்வம், பாலச்சந்தர், ரவீந்திரன் மற்றும் வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஆட்டுக்குட்டியை பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகள்