< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை:  போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
4 Sept 2022 10:28 PM IST

திண்டுக்கல்லில் கொட்டி தீர்த்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்ட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.


திண்டுக்கல்லில் கடுமையான வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பலத்த மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி வானில் கருமேகக் கூட்டங்கள் திரண்டு இருந்தன. ஆனால் பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. இரவு 8 மணி அளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் வாணிவிலாஸ் மேடு, பழனி பைபாஸ் சாலை, நாகல்நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. அதில் வாகனங்கள் மெதுவாக நீந்தியபடி சென்றன.


வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


மேலும் செய்திகள்