< Back
மாநில செய்திகள்
கடந்த மாதத்தில்இயல்பை விட கூடுதல் மழைபெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

கடந்த மாதத்தில்இயல்பை விட கூடுதல் மழைபெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
2 Jun 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் இயல்பை விட கூடுதல் மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

சாரல்மழை

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் கோடைமழையுடன் தொடங்கியது. அதற்கு பின்னரும் விட்டுவிட்டு மழை பெய்ததால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த 29-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் திடீரென வெயிலின் தாக்கம்அதிகரித்தது.

நாமக்கல் நகரிலும் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென சாரல்மழை பெய்ய தொடங்கியது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுவீசியது.

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். ஆனால் தற்போது வரை 165.78 மி.மீ.மழை பெறப்பட்டு உள்ளது. மே மாதம் முடிய இயல்பு மழையளவை விட 1.58 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

704 ஹெக்டேரில் பருத்தி

நடப்பு ஆண்டில் நெல் 16.5 ஹெக்டேரும், சிறுதானியங்கள் 221.52 ஹெக்டேரும், பயறு வகைகள் 2 ஹெக்டேரும் எண்ணெய் வித்துக்கள் 26.90 ஹெக்டேரும், பருத்தி 704 ஹெக்டேரும் மற்றும் கரும்பு 53 ஹெக்டேரும் என மொத்தம் 1021.70 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தோட்டக்கலை பயிர்களில் மரவள்ளி 6 ஹெக்டேர் மற்றும் வாழை 2 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்