ரூம் போட்டு பதுங்கிய ரவுடிகள்.. சுற்றி வளைத்து தூக்கிய போலீசார்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்
|உளுந்தூர்பேட்டை அருகே முதியவர்கள் உள்பட 6 பேரை தாக்கிய சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே தொப்பையன் குளத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். கடந்த 30-ஆம் தேதி இவர் தனது முந்திரி தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது இல்ல திருமண விழாவிற்கு சென்னையிலிருந்து வந்த 2 பேர், பெண்களை அழைத்துக் கொண்டு அவரது தோப்பிற்கு வந்துள்ளனர்.
அவர்களை சிவராஜ் திட்டி அனுப்பிய நிலையில், நேற்று நள்ளிரவு இரண்டரை மணியளவில், மகாலிங்கத்தின் மகன்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த சிலர், சிவராஜை வீடு புகுந்து தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட்டு விட்டு பணம் தராமல் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி 3 பேரை தாக்கினர்.
இது குறித்து விசாரிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் சென்னை அருகே லாட்ஜ் ஒன்றில் பதுங்கி இருப்பதைக் கண்டறிந்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.