விருதுநகர்
தொடர் மழையால் குவாரி பெருகியது
|ஆலங்குளம் பகுதியில் தொடர் மழையால் குவாரி பெருகியது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் தொடர் மழையால் குவாரி பெருகியது.
தொடர்மழை
ஆலங்குளம் சிமெண்டு ஆலைக்கு அருகே குவாரி உள்ளது. இந்த குவாரியில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆலங்குளம், சங்கரமூர்த்தி பட்டி, கொங்கன்குளம், அம்பேத்கர் நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த குவாரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த குவாரியில் தண்ணீரின் அளவு குறைந்து இருந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குவாரி பெருகியது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
ஆலங்குளத்தில் உள்ள குவாரி நீரை நம்பி 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் உள்ளனர். இந்தநிலையில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் குவாரிக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து வந்தது. தற்போது குவாரி பெருகி விட்டது. இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். அத்துடன் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். தொடர்ந்து மழை பெய்தால் நீர்நிலைகளில் ஓரளவு தண்ணீர் வரத்து அதிகரித்து விடும். தொடர்மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.