< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
|10 Sept 2023 12:15 AM IST
ஆழ்வார்குறிச்சி அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
கடையம்:
ஆழ்வார்குறிச்சியை அடுத்துள்ள செட்டிகுளத்தில் முத்துக்குமார் என்பவரது வீட்டில் புகுந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கியதாக கடையம் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் வேல்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்றார். 6 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டார்.