< Back
மாநில செய்திகள்
முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு
மாநில செய்திகள்

முட்டை கொள்முதல் விலை அதிரடி உயர்வு

தினத்தந்தி
|
27 Dec 2023 5:16 AM IST

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20-ந்தேதி வரை 550 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 20-ந்தேதி வரை 550 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. பின்னர் 20-ந்தேதி முதல் நேற்று வரை தொடர்ச்சியாக 7 நாட்களாக முட்டை பண்ணை கொள்முதல் விலையானது தினந்தோறும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று முட்டை கொள்முதல் விலை அதிரடியாக 5 காசுகள் உயர்த்தப்பட்டு 585 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 22 நாட்களில் மட்டும் 110 காசுகள் முட்டை கொள்முதல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோழி பண்ணையாளர்கள் கூறுகையில், 'வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அதனால் முட்டை கொள்முதல் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 600 காசுகள் வரை முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்புள்ளது. எனவே சமீபத்தில் முட்டை கொள்முதல் விலை குறைய வாய்ப்பு இல்லை' என்றனர்.

மேலும் செய்திகள்