< Back
மாநில செய்திகள்
பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய பொதுமக்கள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்திய பொதுமக்கள்

தினத்தந்தி
|
7 Feb 2023 1:19 AM IST

சங்கராபுரம் அருகே பசு மாட்டுக்கு பொதுமக்கள் வளைகாப்பு நடத்தினர்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை மேலகங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பசு மாடு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. அதற்கு அம்சவேணி என பெயாிட்டு பராமாித்து வருகின்றனா். இந்நிலையில் கருவுற்ற பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்த கோவில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவு செய்தனா்.அதன்படி யாக வேள்வி பூஜையுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி பொதுமக்கள் வளையல் தட்டுகள், சீர்வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோமாதாவிற்கு மாலை அணிவித்து, யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது.

தொடா்ந்து மாட்டின் காலில் சலங்கை கட்டி, கழுத்தில் இருந்த கயிறு மற்றும் கொம்பில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகள் இல்லாத தம்பதியினரும் கலந்து கொண்டு மாட்டிற்கு வளையல் அணிவித்தும், மஞ்சள் பூசி வணங்கி சென்றனர். பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது பற்றி அறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் ஆா்வத்துடன் வந்து, பசு மாட்டுக்கு வளையல், சலங்கை அணிவிக்கப்பட்டிருந்ததை பாா்த்து நெகிழ்ச்சி அடைந்தனா்.


மேலும் செய்திகள்